Viglink installation

Viglink installation

Viglink installation

Friday, April 5, 2019

My Favorite Songs - எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

படம்:- அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்:- எஸ்.பி.பால சுப்பிரமணி யம்.
இசையமைப்பாளர்கள்:- சங்கர்-கணேஷ்
எழுதியவர்:- தெரியவில்லை.

MOVIE: ARTHANGAL AAYIRAM
SINGER: S.p.Bala subramani am
MUSIC: Sankar and Ganesh
Lyrics:-?????

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

நீலவான மேகம் போலக் காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
நீலவான மேகம் போலக் காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு 
ஹா....
குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிட வா அலையெனவே
தழுவிட வா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

மோக வீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னைச் சூடிடவா
தோகை நீயே மேடை நானே
மதன் வீசிடும் கணை பாயுது
மலர் மேனியும் கொதிப்பாகுது
குளிர் ஓடை நீயே வா வா

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்

கவிபாட விழிக்கென்ன நாணம்

( வாய்ப்பு இருந்தால் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.உங்களுக்கும் கவிதை எழுத  தோன்றும்.அப்படி தோன்றினால் நீங்களும் கவிதை எழுத முழு தகுதியானவர் என்று அர்த்தங்கள் ஆயிரம் என்று தெரியும்.குறிப்பு:- சத்தமும் நடையும் அதற்க்கான இசையும்  மிக மிக மிக மிகவும் அழகாக இருக்கும்.)
நன்றி :-இ.செங்குட்டுவன்.வத்தலக்குண்டு

Thanks:- 
http://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Arthangal%20Aayiram