Viglink installation

Viglink installation

Viglink installation

Sunday, May 12, 2019

துளிர்விட்ட ஆசை

                                                                                                             Writer.      :-        e.senguttuvan
                                                                                                             Date.        :-        11.05.2019
ஏதோ ஒருநாள்!!!
நினைவுகளின் முதுகில்,
தேதி ஏறி நின்று-பின்
தொலைந்து போனதால் -என்னுள் 
ஒருவேளை,
அது  தான்  ( thaanakave)
கரைந்து போனதால்,
ஞாபகத்தின் எல்லைக்குள் வரவில்லை.


antru  தின்று முடித்த மாம்பழத்தின் 
எச்சம்- O " அது அவ்வுயிரின்
உயிர் முடிச்சோ!!!                                           ( மாம்பழக் கொட்டை)


மாம்பழ  விதையினை!
வீட்டு கொல்லையின் ஈர மண்ணில்
வீசி எறிந்தேன்-ஒரமாக!!!

எதை எங்கு விதைக்கிறோமோ-
அது தான் அங்கு -அது வளரும்-அதுவும்,
அதுவாய் வளரும்.
என்ன செய்வது!!!
அதன் விதி
அப்படி.........????? ????

சந்திக்கும் 
சமுதாய வீதியில்
நல் எண்ணங்களை நாம்
விதைத்தால்!!!
நல்ல எண்ணங்களே தான்,
வளரும்-இது ஒரு
மரபு மாறாகோட்பாடு!

மாம்பழ விதை நன்றாகத் தான்
வளரந்திருந்தது - கொல்லையில்,
ஏனோ
வீதியில் 
விதைத்திருந்த நல்ல எண்ணங்கள்
வளரவில்லை என்பதை விட-துளிர் கூட
விடவேவில்லை -இது என்ன 
மரபு மாறிய -புது ஏற்பாடோ!
பிரியவில்லை என்பது மட்டும் தான்
இங்கு  முழுமையான விடை..

இன்று நன்றாய் 
வளர்ந்து நின்ற மரத்தின் கிளையில்
அங்கும் இங்குமாய்-அந்த 
சின்னஞ்சிறு சிட்டு குருவிகள்
உட்கார்ந்து உட்கார்ந்து
பறந்து போவதை பார்க்கும்போது தான்,
ஆனந்தம் ஆனந்தம் -அப்படி ஓர் 
பேரானந்தம்

அதுவும் வேண்டாமென்று 
நாம் வீசி எறிந்த எச்சத்தின் விருட்சத்தில்
சின்னஞ்சிறு பறவைகள் 
பாடியும் , ஓடியும் பறந்து வந்து
அமர்ந்த போது,
ஆனந்தப் பேரலை என்னுள்
ஆர்ப்பரித்தது.

இன்றும் கூட ,
எனது வீட்டு கொல்லை மட்டுமல்ல!
உமது வீட்டுக் தொல்லையும் கூட
தயாராகத்தான் உள்ளது- தின்று  எறியும்
மாங்காய் எச்சத்திற்க்காக???

பாடிப் பறக்கும் பறவைகளும் கூடவே!!!

இ.. செங்குட்டுவன்